இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கழுமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது60). தொழிலாளி. இவர் கழுமங்கலம் படுகை பகுதியில் உள்ள வயலில் கூரை கொட்டகையில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை வைத்திருந்தார். இந்த இரும்பு பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் .திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இரும்பு பொருட்களை திருடிய அம்மையகரம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (26), அம்மன்குடியை சேர்ந்த சிவானந்தம் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.