ஜெனரேட்டர் திருடிய 2 பேர் கைது
பெரியகுளம் அருகே ஜெனரேட்டர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
பெரியகுளம் அருகே செலும்பு பகுதியில் தனியார் இரும்பு கம்பெனி உள்ளது. நேற்று இந்த கம்பெனிக்குள் மர்ம நபர்கள் 2 பேர் புகுந்து அங்கு இருந்த ெஜனரேட்டரை திருடி கொண்டு தப்பி சென்றனர். அப்போது அதை பார்த்த கம்பெனி காவலாளி பாண்டியன் என்பவர் அவர்களை விரட்டி பிடித்தார். பின்னர் அவர்களை பெரியகுளம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த ராஜா சேதுபதி (வயது 27), ராமர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.