தக்கலை அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது

தக்கலை அருகே கோவில்களில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-04 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே கோவில்களில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவிலில் திருட்டு

தக்கலை அருகே கல்லுவிளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் இந்த கோவிலுக்குள் புகுந்த 2 மர்ம ஆசாமிகள் அங்கிருந்த ஒலிபெருக்கி உபகரணங்கள், பென் டிரைவ், மேஜை டிராயரில் இருந்த பணம், சில்லறை காசுகளை திருடி விட்டு தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மஆசாமிகள் 2 பேர் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த திருட்டில் துப்பு துலக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

அதே சமயத்தில் கொள்ளை நடந்த கோவில் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான செல்போன் எண்களை கைப்பற்றியும் ஆய்வு நடந்தது.

அப்போது செல்போன் சிக்னலை வைத்து திருவட்டார் தச்சகுடி விளைபகுதியில் உள்ள நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கோவிலில் திருடிய நபர்களில் ஒருவரான ஜெயக்குமார் (வயது 38) என்பதும், ஒலிபெருக்கி உரிமையாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் கிலாங்குவிளை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (54) என்பவருக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமானது. மேலும் செல்வராஜ் வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆம்ப்ளி பயர்கள், பென் டிரைவ் ஆகியவையும் சிக்கின.

கல்லுவிளை கோவில் மட்டுமின்றி பூவன்கோட்டில் உள்ள மற்றொரு கோவிலிலும் இருவரும் திருடியதை போலீசாரிடம் ஒப்பு கொண்டனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்