ஓடும் பஸ்சில் திருடிய 2 பேர் கைது
ராமநாதபுரம் அருகே ஓடும் பஸ்சில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து திருஉத்தரகோசமங்கைக்கு நேற்று பிற்பகலில் டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏறிய 2 பெண்கள் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். டிக்கெட் எடுக்க வைத்திருந்த பணத்தை காணாததை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் உஷாரான 2 பெண்கள் பஸ் ரோமன் சர்ச் பகுதியில் நின்றபோது குதித்து கீழே இறங்கியுள்ளனர். பயணிகள் கூச்சலிடவே அந்த பகுதியில் இருந்த போலீசார் 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி தேவி (வயது 30) மற்றும் இன்னொரு சங்கரின் மனைவி விஜயலட்சுமி (52) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.