நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது
நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது;
நெகமம்
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையில் நெல்லை மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த காளிராஜ் (வயது 32), அந்தியூரை சேர்ந்த பால்ராஜ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் கோழிப்பண்ணையில் இருந்து 14 மூட்டைகளில் கோழித்தீவனத்தை திருடி அதனை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதனை கவனித்த பண்ணை மேலாளர் வெள்ளிங்கிரி (46) இதுகுறித்து நெகமம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.