மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

நத்தம் அருகே, மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-03 16:10 GMT

நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ். கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், அங்குள்ள நாடகமேடையில் நடந்த வள்ளி திருமணம் நாடக நிகழ்ச்சியை பார்த்தார். பின்னர் அங்கேயே அவர் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சின்னராஜின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடினர். மேலும் அங்கு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.

இந்தநிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது தனது செல்போன், மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்ததை கண்டு சின்னராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெட்டியபட்டியை சேர்ந்த பாவம் என்ற பாபுஜி (வயது 30), லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் (32) என்று தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் நத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேடசந்தூர் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்