மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

உவரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-13 19:21 GMT

திசையன்விளை:

உடன்குடி நடுக்கலன் குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 36). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உவரி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து உவரி போலீசில் சிவக்குமார் புகார் செய்தார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த இருதய ஜெனிஸ் (21), சைமன் (22) ஆகியோர் திருடிசென்றது தெரியவந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், 2 பேரையும் கைது செய்தார். திருட்டு போன மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்