மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆதமங்கலம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் குஞ்சு மகன் பன்னீர். இவருடைய வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு 2 பேர் திருடினர். இதைக்கண்ட ஊர் பொதுமக்கள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மீன்சுருட்டி மண்டபத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் அபினாஷ் (வயது19), பாலகிருஷ்ணன் மகன் விஜய் (23) ஆகியோர் என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.