தீவட்டிப்பட்டி அருகே ரூ.2½ லட்சம் குட்கா கடத்திய 2 பேர் கைது-சரக்கு வேன் பறிமுதல்

தீவட்டிப்பட்டி அருகே ரூ.2½ லட்சம் குட்கா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-18 20:52 GMT

ஓமலூர்:

குட்கா பொருட்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சேலத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சமத்துவபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் சரக்கு வேனுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் உப்பாரப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30), சரக்கு வேன் டிரைவர் என்பதும், உடன் வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வினோத் (30) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான 394 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்