உரிமம் இல்லாமல் ரெயில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது

உரிமம் இல்லாமல் ரெயில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-28 21:48 GMT

திருச்சி பெரிய செட்டி தெரு மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் உரிமம் இல்லாமல் ஆன்லைனில் ரெயில் டிக்கெட் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மண்ணச்சநல்லூர் பகுதியில் கனகராஜ் (வயது 48) என்பவர் ஆன்-லைனில் ரெயில் டிக்கெட் எடுத்து விற்பனை செய்யும் முகவர் உரிமம் பெறாமல், தனது சொந்த ஐ.டி. மூலம் டிக்கெட் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல் பெரிய செட்டி தெருவில் பரத்குமார்(32) என்பவர் டிக்கெட் விற்பனை செய்யும் உரிமம் பெற்றும், தனது சொந்த ஐ.டி. மூலம் டிக்கெட் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்