கிணத்துக்கடவு
சொக்கனூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சொக்கனூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள் இறக்கி விற்பனை செய்ய வைத்திருந்ததாக சொக்கனூரை சேர்ந்த ராமர்(வயது 67) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று கள் இறக்கி விற்ற பழனி ஆண்டவர் வீதியை சேர்ந்த ரமேஷ் குமார்(38) என்பவரையும் போலீசார் கைது செய்து, 6 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.