ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-26 19:06 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை, லாட்டரி, மதுபான விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருவப்பூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் விரைந்து சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ரமேஷ் (வயது 50), சீனிவாசன் (20) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். மேலும் இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.53 ஆயிரம், 21 லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்