லாட்டரி சீட்டுகள்-மது விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-13 17:51 GMT

நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நச்சலூர் காளியம்மன் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன் (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நச்சலூர் மேல்நங்கவரம் ரேஷன்கடை அருகே மது விற்று கொண்டிருந்த கனகராஜ் (35) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்