திருவெண்ணெய்நல்லூரில்லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மண்டகமேடு பகுதியை சேர்ந்த ஏழுமலை(வயது 49). இவரும் இளந்துறையை சேர்ந்த சிவக்குமார்(45) என்பவரும் டி.எடப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகிசய தகவல் கிடைத்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் குறிப்பிட்ட கிராமத்துக்கு சென்று லாட்டரி சீ்ட்டுகளை விற்பனை செய்த ஏழுமலை(வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 26 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.