லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-01-11 18:45 GMT

நாகூர்:

நாகூர் யானை கட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சந்தேகப்படும்படி நின்ற 2 நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், நாகூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது35), நாகூர் பெரியார் தெருவை சேர்ந்த முகமது பாரூக் மகன் ஷாகுல் ஹமீது (42) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் லாட்டரி சீட்டு விற்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்