லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
நத்தம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த எர்ரமநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்ராஜ் (வயது 23), மணக்காட்டூரை சேர்ந்த பெரியசாமி (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 லாட்டரி சீட்டுகள், ரூ.1,950 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.