லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-16 19:19 GMT

நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நச்சலூர் கடை வீதியில் தாட்கோ காலனியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 46), நச்சலூர் வி.ஆர்.ஓ. காலனியில் காமராஜர் நகரை சேர்ந்த காமராஜ் (58) ஆகிய 2 பேரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்