லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-12 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பஸ் நிலையம் பகுதியில் நகர கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மகாலிங்கபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 44) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோன்று கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆனைமலை அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (55) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்