லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-10 18:10 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மச்சுவாடி பகுதியில் விற்ற லட்சுமணன் (வயது 56), தண்டபாணி (40) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 795 மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து கணேஷ்நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்