லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-21 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை முலை கடைவீதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற விழுப்புரம் காந்திநகரை சேர்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன் (வயது 59), பிடாகம் ராஜி மகன் ஜெயபால் (57) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த 40 லாட்டரி சீட்டுகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்