லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை அருகே உள்ள அய்யலூர் ெரயில்வே கேட் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அய்யலூர் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர்கள், திருச்சி மாவட்டம், மணப்பாறை இருதயபுரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 50), அந்தோணிசாமி (42) என்பதும், அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 50 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.