லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
காரைக்குடி
சாக்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாதவன், புதுவயலை சேர்ந்த வீரப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 493 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், ரூ.44 ஆயிரத்து 440, 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.