மதுபானம் விற்ற 2 பேர் கைது

மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-14 18:45 GMT

வீரபாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது 2 பேர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் மொத்தம் 210 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முத்துதேவன்பட்டியை சேர்ந்த அருண் பாண்டி (வயது 30), வயல்பட்டியை சேர்ந்த ராஜா (30) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், பெட்டிக்கடையில் வைத்து மதுபானம் குடிக்க அனுமதித்ததாக ஸ்ரீரங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்