மதுவிற்ற 2 பேர் கைது; 202 மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுவிற்ற 2 பேர் கைது; 202 மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2022-07-21 19:57 GMT

பட்டுக்கோட்டை

பட்டுக்ே்காட்டையில் மதுவிற்ற 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 202 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர சோதனை

பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் அருள்குமார், சையது இஸ்மாயில் உள்ளிட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த பட்டுக்கோட்டை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 33 மதுபாட்டில்கள், ரூ.2,230 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இதேபோல் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த தொண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 169 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்