கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-02 18:34 GMT

குளித்தலை போலீசார் நேற்று குளித்தலை நகரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இலை தலைகளுடன் கூடிய கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர்கள் குளித்தலை பழைய கோர்ட்டு தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 36), குளித்தலை அருகே உள்ள வை.புதூரைச் சேர்ந்த சூர்யா (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்