கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சீவலப்பேரி:
சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாப்பையாபுரம்- ராஜவல்லிபுரம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் பாப்பையாபுரத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 23), ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சப்பாணிமுத்து (29) என்பதும் அவர்கள் விற்பனைக்காக 45 கிராம் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.