கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

பாளையங்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-10-03 21:06 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாலாமடை பகுதியில் சீவலப்பேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பணிகரிசல்குளம், மயன் திருமால் நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ரமணி (32) மற்றும் மேலப்பாலாமடை அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்ற குட்டி (38) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்