ஊத்தங்கரை:-
ஊத்தங்கரை போலீசார் பாரதிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த வழியாக வந்த 2 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தலா 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊத்தங்கரை கலைஞர் நகரை சேர்ந்த கார்த்திக் (22), அண்ணா நகரை சேர்ந்த சந்துரு (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.