பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த சில வாரங்களாக வீடுகளின் அருகில் பட்டாசு தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சிவகாசி கிழக்கு போலீசார் தங்கள் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள், கடைகள் உள்ள பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளப்பட்டி இந்திரா நகர் பகுதியில் ஆய்வு செய்த போது அங்கு வசித்து வரும் சுந்தர் (வயது 29) உள்பட 2 பேர் சேர்ந்து வீட்டின் பின்புறம் பேன்சிரக பட்டாசுகளை தயாரித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 15 கிலோ வெடிமருந்து மற்றும் பேன்சிரக பட்டாசுகளை தயாரிக்க பயன்படும் குழாய்களை பறிமுதல் செய்தனர்.