கொரடாச்சேரி எருக்காட்டூரை சேர்ந்தவர் கண்மணி. இவர், அதே ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அதே ஊரைச் சேர்ந்த வினோத் (வயது 19), ராகுல் ( 19) ஆகிய இருவரும் கடைக்கு சென்று சிகரெட் கடன் கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் கண்மணி சிகரெட் தர மறுத்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத், ராகுல் ஆகியோர் அருகில் கிடந்த கற்களால் கண்மணியை தாக்கி, கடையில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இதுகுறித்து கண்மணி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.