மதுரையில் சட்டவிேராதமாக பார் நடத்திய 2 பேர் கைது
மதுரையில் சட்டவிரோதமாக பார் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் சட்டவிரோதமாக பார் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக பார்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக பார் செயல்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2 பேர் கைது
அப்போது ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மாக் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக பார் இயங்கி வருவது தெரியவந்தது. அதை தொடர்ந்து பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61), சோலையழகுபுரம், ராமமூர்த்தி நகர் பன்னீர்செல்வம் (49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.