மின்வேலி அமைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

மின்வேலி அமைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-29 18:32 GMT

தண்டராம்பட்டு, ஆக.30-மின்வேலி அமைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தனூர் வனச்சரக அலுவலர் நா.சீனிவாசன் தலைமையில் வனவர்கள் சியாமளா, முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் அருள்மொழி முருகேஸ்வரி வெங்கடேசன் சிலம்பரசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ராதாபுரத்தை அடுத்த பண்ணையாறு வீரணம் கிராமம் அருகே காப்புக்காட்டை ஒட்டிய பட்டா நிலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் காட்டுப்பன்றியை கொன்று இறைச்சியை கூறுபோட்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று அவர்களை வனத்துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில் சுப்பிரமணி மகன் மணிகண்டன் (வயது 34), வேலு மனைவி பச்சையம்மாள் (60) என்பது தெரியவந்தது. இவர்கள் பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததும் அதில் சிக்கி இறந்த காட்டுப்பன்றியை சமைப்பதற்காக கூறுேபாட்டதும் தெரியவந்தது. இருவரையும் வனத்துறையினர் கைது செய்து 8 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

இருவரும் வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி இருவருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்திய பின் இருவரும் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்