பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-12-08 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே செங்காடு கிராமத்தில் வளவனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடை அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த விக்கிரவாண்டி அருகே வி.பகண்டையை சேர்ந்த அரங்கநாதன் (வயது 39), புதுச்சேரி மடுகரையை சேர்ந்த பாஸ்கரன் (40) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்