காரிமங்கலம்
காரிமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், முனுசாமி, யூவல்மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேகாரஅள்ளி அருகே முக்கலியூர் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சூதாடிய அதே பகுதியை சேர்ந்த குணசீலன் (42), வேலன் (43) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,600 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.