வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-17 19:01 GMT


விருதுநகர் அல்லம்பட்டி கந்தன் தெருவை சேர்ந்தவர் ஜேசு மணி (வயது 50). இவர் அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று பாண்டியன் நகர் முத்தால்நகரில் உள்ள வாடிக்கையாளருக்கு பலசரக்கு பொருட்களை சைக்கிளில் சென்று கொடுத்துவிட்டு திரும்ப வந்து ெகாண்டு இருந்தார். அப்போது தலைமை தபால் அலுவலகம் முன்பு உள்ள விநாயகர் கோவில் முன்பு சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது விருதுநகர் இளங்கோவன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25), அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்த அரவிந்தராஜ் (27) ஆகிய 2 பேரும் ஜேசுமணியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 1,300-ஐ பறித்ததோடு அவரது கைக்ெகடிகாரத்தையும் கழற்றி தரும்படி கூறியதாக தெரிகிறது. உடனே அவர் சத்தம் போடவும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் வந்த போது மணிகண்டன், அரவிந்தராஜ் ஆகியோர் கத்தியை காட்டி யாராவது பக்கத்தில் வந்தால் தொலைத்து விடுவோம் என மிரட்டியதோடு போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் இதுகுறித்து ஜேசுமணி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த அரவிந்த ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்