சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சிலர் சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கட்டளையை சேர்ந்த ரகு என்கிற அன்பரசு (வயது 31), திருமுக்கூடலூரை சேர்ந்த திவாகர் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய திருமுக்கூடலூரை சேர்ந்த பிரவின் (30), செல்லகுமார் (21), சுரேஷ் (38), அரவிந்த் (30), பார்த்திபன் (எ) மொட்டை மணி (27), மகாமுனி (25) ஆகிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.