மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது
மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாலாப்பேட்டையை அடுத்த வசூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடிமாதம் என்பதால் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோவிலின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் இருவர், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடியுள்ளனர்.
அவ்வழியாக வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், உடனடியாக இருவரையும் மடக்கி பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இடையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மனோ (வயது 28), சோளிங்கர் பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த பாட்ஷா (33) என்பதும் அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.