விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
விவசாயியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 40). விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் ராஜேந்திரன் (37) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசனை ராஜேந்திரன், அவரது நண்பர் புகழேந்தி (47) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 ேபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.