மலைக்கோட்டை, செப்.18-
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் தேர்வுக்கு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இ.பி.ரோடு அண்ணா நகரை சேர்ந்த மாரியப்பன் (35), வடக்கு தாராநல்லூர் சாமிநாதன் பிள்ளை ஸ்டோரை சேர்ந்த நாகராஜ் (39) ஆகியோர் கார்த்திகேயனை கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.