பள்ளிபாளையம்
மொளசி அருகே முதலைப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது32). ஈரோடு அருகே பால் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மண்பச்சபாலி என்னும் இடத்திற்கு தனது மனைவியை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பஸ் நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது முதலைப்பாளையத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (26), கார்த்தி (24) ஆகிய இருவரும் கருணாகரனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருணாகரன் மொளசி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து சவுந்தரராஜன், கார்த்தி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.