முதியவரை தாக்கிய 2 பேர் கைது

முதியவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-29 18:31 GMT

வாங்கல் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 60). இவர் வாங்கல் பகுதியில் ஒரு இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (24), வெற்றிவேல் (23) ஆகிய 2 பேரும் அந்த இடத்தில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரையும் தங்கமணி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், வெற்றிவேல் ஆகியோர் சேர்ந்து தங்கமணியை தாக்கினர். இதில் காயம் அடைந்த தங்கமணி மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின்பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, தங்கராஜ், வெற்றிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்