பள்ளி மாணவனை தாக்கிய 2 பேர் கைது

நெல்லையில் பள்ளி மாணவனை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-08 20:42 GMT

மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 16). பள்ளி மாணவர். இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வண்ணார்பேட்டையை சேர்ந்த வேலவன் ராஜா (21), மானூரை சேர்ந்த மகாராஜன் (19) ஆகியோர் முன்பகை காரணமாக ஆல்வினை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலவன் ராஜா, மகாராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்