2 பேருக்கு 3 ஆண்டு சிறை

சிவகாசியில் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-09-05 19:15 GMT

சிவகாசி, 

சிவகாசியில் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

3 ஆண்டு சிறை

சிவகாசி சாட்சியாபுரம் சுந்தரவிநாயகர் காலனியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி கல்யாணி (வயது 52). இவர் கடந்த 05.11.2018-ந் தேதியன்று இரவு தனது வீட்டின் அருகில் நடந்து வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கல்யாணியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்ட னர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி திருத்தங்கலை சேர்ந்த செல்வகணேஷ் (22), மதன் (24), இளையராஜா (20) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் செல்வ கணேஷ் இறந்து விட்டார். இந்த நிலையில் மாஜிஸ்திரேட் ராஜேஷ் கண்ணன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளையராஜாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இருந்து மதன் விடுதலை செய்யப்பட்டார்.

12 பவுன் நகை

இதேபோல் சிவகாசி அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்தவர் சண்முகபிரியா (27). கடந்த 10.12.2018 அன்று தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக இன்னொரு மோட்டார் சைக்களில் வந்த 3 பேர் சண்முகபிரியா கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்தங்கலை சேர்ந்த செல்வகணேஷ் (22), மதன் (24), இளையராஜா (20) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடை பெற்று வந்தது. இதற்கிடையில் செல்வ கணேஷ் இறந்து விட்டார். இந்த நிலையில் மாஜிஸ்திரேட் ராஜேஷ்கண்ணன் நகை பறிப்பில் ஈடுபட்ட மதன், இளையராஜாவுக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்