2-வது நாளாக முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் போராட்டம்

பழனி முருகன் கோவில் அதிகாரியை கண்டித்து 2-வது நாளாக முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-21 19:45 GMT

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு வருகை தரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக அடிவாரம், சரவணப்பொய்கை, கிரிவீதி உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவில் உதவி ஆணையர், முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தி வருவதாகவும், அவர் மீது துறை சார்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று முன்தினம் பழனி கோவில் முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் உதவி ஆணையரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, எங்களுக்கு முறையாக பங்கு தொகை வருவதில்லை. இதுபற்றி கேட்டாலும் அதிகாரிகள் அவமரியாதை செய்கின்றனர். எனவே எங்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்