பணம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

பணம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-27 19:55 GMT

நெல்லை அருகே கீழதென்கலம் பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் சோப்பு விற்ற நபர்களிடம் சோப்பு வாங்கியதாகவும் பின்னர் சோப்பு விற்றவர்கள் குலுக்கல் முறையில் பரிசு கொடுப்போம் என்று கூறி பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பெற்று சென்றனர். சில நாட்கள் கழித்து அந்த கம்பெனியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி குலுக்கல் முறையில் தங்கக்காசு, டி.வி., மோட்டார் சைக்கிள் பரிசு விழுந்திருப்பதாக கூறி பரிசு பொருட்களை அனுப்புவதற்காக வரி கட்ட வேண்டும் என்று கூறி ரூ.36 ஆயிரத்து 550 பெற்றுக் கொண்டு பரிசுப்பொருள் அனுப்பாமல் ஏமாற்றி விட்டதாக புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழில்நுட்ப உதவியுடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சங்கரன்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27), முருகன் (22) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்