ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நேற்று இந்து தேசிய கட்சி சார்பில் ராமர் உருவப் படத்துடன் ரத யாத்திரை செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ராமர் படத்துடன் ரத விதிகளை சுற்றி வருவதற்கு போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் ராமர் உருவப்படத்துடன் போலீசாரின் தடையை மீறி தெற்கு ரதவீதியில் உள்ள இந்து தேசிய கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட முயன்ற கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஷ் சர்மா மற்றும் மாவட்ட தலைவர் வீராசாமி ஆகிய 2 பேரையும் துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.