2 மாவுமில் உரிமையாளர்கள் கைது

ஆத்தூரில் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்த 2 மாவுமில் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-05 19:30 GMT

ஆத்தூர், நவ.6-

ஆத்தூரில் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்த 2 மாவுமில் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாவுமில்களில் சோதனை

ஆத்தூர் பகுதியில் உள்ள மாவு அரைக்கும் மில்களில் ரேஷன் அரிசி பதுக்கி மாவு அரைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். குறிப்பாக சேலம் மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை தாசில்தார் ராஜேஷ்குமார், ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜோதி மற்றும் வழங்கல் துறை அலுவலர்கள் ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் சேகர் (வயது 51) என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்கும் மில்லில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 65 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2.1 டன் ரேஷன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் தங்கமணி (59) என்பவருக்கு சொந்தமான மில்லில் 215 கிலோ ரேஷன் அரிசி, 400 கிலோ ரேஷன் அரிசி மாவு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

உரிமையாளர்கள் கைது

இது தொடர்பாக வழங்கல் துறை அலுவலர்கள் சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவு மில் உரிமையாளர்கள் சேகர், தங்கமணி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு ரேஷன் அரிசி விற்பனை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக வட்ட வழங்கல் துறை அலுவலர் ஜோதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்