2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-01 17:48 GMT

குடியாத்தம் கூடாநகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் (வயது 30), வசந்த் (34). இவர்கள் இருவரையும் கடந்த மாதம் சாராயம் விற்ற வழக்கில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். வினோத், வசந்த் மீது சாராயம் விற்றது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவரும் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் வினோத், வசந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்