ரூ.2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-13 20:36 GMT

புதுக்கோட்டை டவுன் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்தனர். இதில் அவர்கள் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காமராஜபுரத்தை சேர்ந்த ஆசாத் (வயது 23), திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்த முகமது ஹனிபா(40) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு மொபட், 2 செல்போன்களை கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்