லாரியில் ஏற்றிச்சென்ற ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
லாரியில் ஏற்றிச்சென்ற ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு போனது.
துவரங்குறிச்சி:
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே மோர்னிமலையில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் அந்த லாரியை டிரைவர் காந்தி(வயது 51) நிறுத்தி வைத்திருந்தார். அப்போது லாரியின் மேற்பகுதியில் கட்டி மூடி வைக்கப்பட்டிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு, மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பின்னர் டிரைவர் லாரியில் பார்த்தபோது சுமார் ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்த 40 பெட்டிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து காந்தி அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.